Published : 20,Nov 2022 08:07 AM

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20: எப்படி விளையாடப்போகிறது இளம் இந்திய அணி?

India-NZ-2nd-T20--How-the-young-Indian-team-will-play-

இந்தியா நியூசிலாந்து அணிகள் எதிர்கொள்ளும் இரண்டாவது டி20 போட்டி இன்று நியூசிலாந்து பே ஓவல் மைதானத்தில் மதியம் 12 மணிக்கு நடைபெற இருக்கிறது.

2022 டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிப்போட்டிகளில் தோல்வியடைந்த இரு அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடரின் இரண்டாவது போட்டி நியூசிலாந்து மவுன்கானு மவுண்ட் இடத்தில், பே ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2ஆவது போட்டி இன்று நடைபெறவிருக்கிறது.

2022 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதி போட்டியோடு வெளியேறியதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் பிசிசிஐ, பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. டி20 உலகக்கோப்பையிலிருந்து திரும்பிய பிறகு தலைமை பயிற்சியாளர், மூத்த வீரர்கள், தேர்வுக்குழு ஆலோசகர்களோடு ஒரு மீட்டிங்கை நடத்திய பிசிசிஐ, சந்திப்பு கூட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் தேர்வுக்குழுவை பகிரங்கமாக கூண்டோடு கலைத்தது.

image

மேலும் இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் கடைப்பிடித்து வரும், ஸ்பிலிட் கேப்டன்சி அணுகுமுறையை இந்திய அணியில் கொண்டுவரும் முனைப்போடு இருக்கிறது பிசிசிஐ. அதில் டி20 இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே அடுத்த டி20 உலகக்கோப்பை வரை நீடிப்பார் என்று கூறப்படுகிறது.

image

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா. நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை கைப்பற்றிய நிலையில், இந்திய அணியையும் திறம்பட வழிநடத்துவார் என்று நம்பப்படுகிறது.

image

இந்தியா-நியூசிலாந்து டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இன்று 2ஆவது டி20 போட்டி நடக்கவிருக்கிறது. சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சேம்சன், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

போட்டி நேரம்

image

இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு நியூசிலாந்தின் மவுன்கானு மவுண்ட் இடத்தில், பே ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

மழை பாதிப்பு இருக்குமா?

முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இன்று நடைபெறவிருக்கும் மைதானத்திலும் மழை குறுக்கிடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. காலை 9 முதல் 4 மணி மழை இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து மண்ணில் இந்தியா

இதுவரை நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி 10 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள நிலையில், இந்தியா 4 போட்டிகளிலும், நியூசிலாந்து 4 போட்டிகளிலும் வென்று சம பலத்தில் உள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்