வேலையின்மையால் புதுமண தம்பதிகள் தற்கொலை!

வேலையின்மையால் புதுமண தம்பதிகள் தற்கொலை!
வேலையின்மையால் புதுமண தம்பதிகள் தற்கொலை!

மும்பையில் வேலையின்மை காரணமாக புதுமண தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை மாலத் பகுதியைச் சேர்ந்தவர்கள் தன்ராஜ் (24) காஜல் (19). இவர்கள் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டு இப்பகுதிக்கு குடியேறியுள்ளனர். திருமணம் ஆகிய சில தினங்களிலே தன்ராஜ் தனது வேலையை இழந்துள்ளார். அதன் பின்பு பல இடங்களில் முயற்சித்தும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதனால் கடந்த சில நாட்களாய் தன்ராஜ் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால் மனமுடைந்த தம்பதியினர் இருவரும் தங்களது வாழ்க்கையினை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். 

அதன்படி நேற்று இரவு 8.30 மணியளவில் இவர்கள் தங்களது வீட்டின் உத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசேதனைக்காக மும்பை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலையின்மையால் புதுமண தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட் சம்பவம் அப்பகுதியினரிடம் பெறும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com