Published : 19,Nov 2022 06:54 PM

ஹர்திக்கா? ரோகித்தா?.. பிசிசிஐ-ன் அடுத்த அதிரடி! ஸ்பிலிட் கேப்டன்சி அணிகள் ஒரு பார்வை

Hardik--Rohit--BCCI-next-action-plan--a-look-about-Split-captaincy-teams

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு நிரந்தரமாக தனித்தனி கேப்டன்களை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிதாக நியமிக்கப்படும் இந்திய அணியின் தேர்வுக்குழு அந்த முடிவை எடுக்கும் என்று தெரிகிறது.

இந்திய அணி இங்கிலாந்து வழியில் செல்ல வேண்டுமா என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அப்போதெல்லாம் கேப்டன்களை பிரிப்பது குறித்த யோசனைகள் பிசிசிஐயால் ஒதுக்கி வைக்கப்பட்டே வந்தது. இந்நிலையில், அமைக்கப்படவிருக்கும் புதிய தேர்வுக் குழுவை மூன்று வடிவங்களில் கேப்டன்களை தேர்வு செய்ய பிசிசிஐ கட்டாயமாக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

image

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் படுதோல்விக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்கள் மற்றும் மூத்த வீரர்கள், வல்லுநர்கள் அழைப்பு விடுத்து ஆலோசனை கூட்டம் நடத்தியது பிசிசிஐ, அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சேட்டன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தேர்வு குழுவை முழுமையாக கலைத்தது பிசிசிஐ.

பின்னர் தற்போது இந்திய அணியின் இரண்டு விதாமான போட்டிகளில் தனித்தனியாக கேப்டன்களை நியமிப்பதை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. வெள்ளைபந்து மற்றும் சிவப்பு பந்து வடிவ போட்டிகளில் இரண்டுவிதமான கேப்டன்களை பயன்படுத்தும் அணிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அறிமுகம் செய்துள்ளன. அதில் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 என இரண்டுவிதமான கோப்பைகளை கைப்பற்றி அசத்தியுள்ளது.

image

பிசிசிஐ இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான பதவிக்கு புதிய விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 28 ஆகும்.

இந்நிலையில், தேர்வுக்குழு அமைந்ததற்கு பிறகு தனித்தனி கேப்டன்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. தேர்வு குழு உறுப்பினர்களின் முதல் அறிவுறுத்தல் மூன்று வடிவங்களிலும் கேப்டன்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதாகும். அதன்படி ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான கேப்டன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வார் எனவும், அதே நேரத்தில் ஹர்திக் பாண்டியா 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் அடுத்த டி20 உலகக் கோப்பை வரை டி20க்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

image

கேப்டன்சியை பிரிப்பது என்பது இந்தியாவிற்கு இது முதல் முறை கிடையாது. வெற்றி கேப்டன் எம் எஸ் தோனி 2007ல் வெள்ளைப் பந்து கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டபோது, அனில் கும்ப்ளே தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று ஆடியது.

image

மற்ற நாடுகளை பொறுத்தவரையில், முன்னதாக 5 நாடுகள் ஸ்பிலிட் கேப்டன்சியை வைத்திருந்தன.

அதில்,

  1. இங்கிலாந்தில் ஜோ ரூட்(டெஸ்ட்) & இயோன் மோர்கன்( டி20, ஒடிஐ),
  2. ஆஸ்திரேலியாவில் டிம் பெயின் (டெஸ்ட்) & ஆரோன் பிஞ்ச்( டி20, ஒடிஐ),
  3. வெஸ்ட் இண்டிஸ் பிராத்வெயிட்(டெஸ்ட்) & பொல்லார்டு( டி20, ஒடிஐ),
  4. தென்னாப்பிரிக்கா டீன் எல்கர் (டெஸ்ட்) & டெம்பா ( டி20,ஒடிஐ),
  5. பங்களாதேஷ் மொமினுல் ஹக்(டெஸ்ட்) & டமீம் இக்பால் (ஒடிஐ) & மொஹமதுல்லா(டி20),
  6. இலங்கை கருணரத்னே( டெஸ்ட்), தனுன் ஷனகா( டி20, ஒடிஐ) என பல நாடுகள் ஸ்பிலிட் கேப்டன்சியை தொடர்ந்து வைத்திருந்தன.

image

இப்போதைய நிலைப்படி,

ஆஸ்திரேலிய அணி பேட் கம்மின்ஸ் (டெஸ்ட், ஒடிஐ) & ஆரோன் பிஞ்ச் (டி20),

இங்கிலாந்து அணி ஜாஸ் பட்லர் ( ஒடிஐ, டி20) & பென் ஸ்டோக்ஸ் ( டெஸ்ட்),

வெஸ்ட் இண்டிஸ் பிராத்வெயிட் ( டெஸ்ட்) & ஆண்ட்ரே ரஸ்ஸல் ( ஒடிஐ) & நிக்கோலஸ் பூரன் ( டி20),

இலங்கை கருணரத்னே( டெஸ்ட்), தனுன் ஷனகா( டி20, ஒடிஐ),

தென்னாப்பிரிக்கா டீன் எல்கர் (டெஸ்ட்) & டெம்பா ( டி20,ஒடிஐ).

பங்களாதேஷ் ஷாகிப் அல் ஹசன் ( டெஸ்ட், டி20) & டமீம் இக்பால் ( ஒடிஐ) முதலிய ஸ்பிலிட் கேப்டன்சியை பயன்படுத்தி வருகின்றன.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்