Published : 23,Sep 2017 01:25 PM

திமுகவில் அதிக உறுப்பினர்களை சேர்க்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

mk-stalin-request-to-party-members-that-add-more-members-to-dmk

திமுகவில் புதிய உறுப்பினர் சேர்த்தல் மற்றும் உறுப்பினர் புதுப்பித்தல் நவம்பர் 15ம் தேதி வரை நடைபெறும் நிலையில், புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்குமாறு தொண்டர்களை கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் முடிந்த பிறகு கட்சி அமைப்புக்கான 15ஆவது தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். பலதுறைகளையும் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள், பொதுநலனில் அக்கறை கொண்டோர் அனைவரையும் அவர்களது ஒப்புதலோடு திமுக உறுப்பினராக்க உழைக்குமாறு ஸ்டாலின் தொண்டர்களை வலியுறுத்தியுள்ளார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்