Published : 19,Nov 2022 04:32 PM

விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு ஆந்திராவில் எழுந்த சிக்கல்; கொதித்தெழும் தமிழ் இயக்குநர்கள்!

Vijay-s-varisu-movie-release-issue

தில் ராஜூ தயாரிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கு மொழியிலும் தயாராகி வருவதால், இந்தப் படம் ‘வரசுடு’ என்றப் பெயரில் மகர சங்ராந்தி அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டதுதான் தாமதம். அதுமுதல் இந்தப் படத்திற்கு புதுப் பிரச்சனை உருவாகியுள்ளது.

அந்தவகையில் தெலுங்கின் முன்னணி நடிகர்களின் படங்களும் மகர சங்ராந்தியை ஒட்டி தெலங்கானா மற்றும் ஆந்திராவில் வெளியாவதால், விஜய்யின் ‘வரசுடு’ படத்திற்கு திரையரங்குகள் ஒதுக்கிவதில் சிக்கல் உருவாகியுள்ளது. ஒருவேளை அதிக திரையரங்குகள் விஜய் படத்திற்கு ஒதுக்கப்பட்டால், இதனால் அம்மாநில நடிகர்களின் படங்களின் வசூல் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. இதையடுத்து நேரடி தெலுங்குப் படத்திற்கு மட்டுமே முன்னுரிமை தர வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திரையரங்குகளுக்கு அறிவுறுத்தியுள்ளதால், மகர சங்ராந்தி அன்று விஜய் படம் வெளியாகுமா அல்லது தள்ளிவைப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு தெலுங்கு திரையுலகில் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் சங்கத்தில் ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு உள்ளிட்டோர் தெலுங்கு தயாரிப்பாளர்களின் முடிவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளதாவது, “துணிவு, வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வருகிறது. ஆனால் தெலுங்கில் பொங்கலுக்கு வெளியிட மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுபோன்ற பிரிவினைகள் இல்லை. ‘கே.ஜி.எஃப்’,‘பாகுபலி’ போன்ற படங்கள் தமிழ்நாட்டில் பண்டிகை தினத்தில் தான் ஓடி வெற்றிபெற்றது.  ‘பொன்னியின் செல்வனை’ கொண்டாடிய நாம், ‘காந்தாரா’ வெற்றியையும் கொண்டாட தவறவில்லை. தமிழர்கள் மட்டுமே ஆந்திரா, மலையாளி போன்றோரை திராவிடம் என்ற உணர்வோடு பார்க்கிறோம், ஆனால் அவர்கள் தமிழர்கள் என்றே பிரித்துப் பார்க்கிறார்கள்.

ஆகவே தென்னிந்திய வினியோஸ்தர்கள் இந்த விசயத்தில் தலையிட்டு இதை தட்டி கேட்க வேண்டும். ‘வாரிசு’ போன்ற தமிழ் திரைப்படத்திற்கு நாம் குரல் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

நிகழ்ச்சிக்கு பின் இயக்குநர் லிங்குசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘வாரிசு’ திரைப்படம் ஆந்திராவில் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்றால், தமிழ்நாட்டில் தெலுங்கு சினிமா ‘வாரிசு’க்கு முன், ‘வாரிசு’க்கு பின் என்று ஆகிவிடும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்தக் காலம் சினிமாவின் பொற்காலம். பல காலகட்டங்களாக பான் இந்தியா என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் பல்வேறு படங்கள் வெளி வந்துள்ளது. இங்கு திரையிடப்படும் படத்தை எங்கோ ஒரு மாநிலத்தில் உட்கார்ந்து ரசிகர்கள் ஓ.டி.டி. யில் பார்க்கின்றனர். முக்கியமான காலகட்டத்தில் இது போன்ற பிரச்சனை வரவே கூடாது. தமிழ் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று சொன்னால், அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது, அந்த அளவிற்கு அது பிரச்சனையாகும், ‘வாரிசு’க்கு முன்னும் பின்னும் என்று பெரிய விஷயம் ஆக மாறிவிடும்.

மிகத் தரமான ஆட்கள் இரண்டு இடங்களிலும் உள்ளனர். அவர்கள் பேசி இதற்கு சுமூகமான முடிவை எடுக்க வேண்டும். ராஜமவுலி எடுக்கும் ‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ தமிழகத்தில் பெரிதாகப் போகிறது. தமிழகத்தில் எடுக்கும் படங்கள் அங்கு பெரும் ஹிட் ஆகிறது. இயக்குநர் ஷங்கரின் எத்தனையோ படங்கள் ஆந்திராவில் வெளிவந்துள்ளது, குறுகிய எண்ணத்தோடு யாராவது நினைத்திருந்தார்கள் என்றால், அந்த நினைப்பை உடனே மாற்ற வேண்டும்.

அது யாராக இருந்தாலும் சரி, அதை மாற்றவில்லை என்றால் ‘வாரிசு’க்கு முன்னும் பின்னும் என்று சினிமா மாறிவிடும். அதை எல்லாரும் தலையிட்டு படத்தை வெளியிட வேண்டும். தெலுங்கு தயாரிப்பாளர் பண்ணியிருக்கும் படம் அது, இது பிரச்சினையாகவே ஆக்க கூடாது. இது சின்ன ஒரு சலசலப்பு. கூடிய விரைவில் விலகிவிடும். விலகவில்லை என்றால் அது விவகாரத்திற்கான அனைத்து விஷயங்களை நாங்கள் நின்று செய்வோம்” என்று லிங்குசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையிவ் நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகுவதை மறைமுகமாக உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தடுக்கிறது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார். கோவில்பட்டியில் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, “ரெட் ஜெயண்ட் மூலமாக மூலமாக வந்தால் மட்டும் தான் திரைப்படம் வெளியாகும் என்ற சூழ்நிலை உள்ளது. இதனால் திரைத்துறையினர் கொதித்துப் போய் உள்ளனர்.

அதிகமான செலவில் படம் எடுத்தாலும், ரெட்ஜெயண்ட் மூலமாக வந்தால் மட்டுமே வெளியீடு நிலை உள்ளது. இந்தநிலை தான் ‘வாரிசு’ திரைப்படத்திற்கும். இதேநிலை நீடித்தால் ரெட் ஜெயண்ட் மட்டும் தான் படம் எடுக்க முடியும் என்ற நிலை உருவாகும். திரைத்துறை அழிவை நோக்கி செல்கிறது” என்று தெரிவித்தார். 

விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கு சினிமாவில் வெளியாவது குறித்த சர்ச்சை நாளுக்கு நாள் விவாதப் பொருளாக மாறிக்கொண்டே செல்கிறது. தெலுங்கு சினிமா தரப்பில் இதற்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்