Published : 18,Nov 2022 07:29 PM

யூ-டர்ன் செய்ய நின்ற போது நிகழ்ந்த கோர விபத்து - மகள் கண்முன்னே தந்தை பலியான சோகம்!

Tempo-Traveller-collided-with-a-two-wheeler-Father-died-in-front-of-his-daughter

ஆவடியில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெற்ற மகள் கண்முன்னே தந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியை அடுத்த திருநின்றவூர் பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் 68 வயதான சந்திரசேகர். இவர் தி.நகரில் உள்ள லெதர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இன்று காலை மகளை ஆவடி செக் போஸ்ட் அருகே இறக்கிவிட்டுவிட்டு யூ டர்ன் செய்ய நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, ஆவடி செக் போஸ்டில் இருந்து ஆவடி நோக்கி சென்ற பிரேக் பிடிக்காத டெம்போ ட்ராவலர் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனம் 100 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சந்திரசேகரை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

image

பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவுசெய்து, அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் டெம்போ ட்ராவலரை ஓட்டி வந்த ஓட்டுநர், காஞ்சிபுரம் மாவட்டம் பரணிசேரிப் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (27) என்பது தெரிய வந்தது. இவர், ஆவடியில் இருந்து தண்டலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றி செல்ல டெம்போவை கொண்டு சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.

இதையடுத்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் இளைஞரை கைது செய்து விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகள் கண் முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்