Published : 17,Nov 2022 09:24 PM

”ரூ1500-க்காக கொலையா?”-ஆம்புலன்ஸ் மோதி மெக்கானிக் பலியானதில் டிரைவர் பகீர் வாக்குமூலம்

Virudhunagar--Shock-to-the-police-who-investigated-it-as-an-accident-Change-to-a-murder-case-

விருதுநகரில் ஆம்புலன்ஸ் மோதி விபத்தில் இறந்தவர் வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே பட்டம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் சங்கரலிங்கம் (42). இவர் பட்டம்புதூரில் டிவி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சங்கரலிங்கம் நேற்று பட்டம் புதூரில் இருந்து R.R.நகரில் உள்ள உணவகத்துக்கு சாப்பிட சென்று விட்டு திரும்பி தன்னுடைய இருச்சக்கர வாகனத்தில் பட்டம்புதூர் நோக்கி சென்று உள்ளார். அப்போது பட்டம் புதூர் அருகே உள்ள அக்ரஹாரப்பட்டி விளக்கில் சங்கர் சென்ற இருச்சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சங்கர் இருச்சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

image

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வச்சக்காரப்பட்டி போலீசார், சங்கரலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்திய வச்சக்காரப்பட்டி போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சங்கரலிங்கத்தின் இருச்சக்கர வாகனத்தின் மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

image

தொடர்ந்து அந்த ஆம்புலன்ஸின் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்ததில், அந்த ஆம்புலன்ஸ் பட்டம்புதூர் அருகே உள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்த முருகன் (31) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்ததை அடுத்து, வச்சக்காரப்பட்டி போலீசார் முருகனை பிடித்து விசாரணை செய்ததில் டிவி மெக்கானிக் சங்கரலிங்கத்தை ஆம்புலன்ஸை ஏற்றி கொலை செய்ததாக வாக்குமூலமாக அளித்துள்ளார்.

image

முருகன் போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில், தனது டிவியை பழுது பார்த்துக் கொடுக்க சங்கரலிங்கத்திடம் 1500 கொடுத்ததாகவும், ஆனால் பல நாட்களாகியும் சங்கரலிங்கம் டிவியை பழுது நீக்கி கொடுக்காமலும், கொடுத்த 1500 ரூபாயை திரும்பிக் கொடுக்காமலும் இருந்ததால், ஆத்திரத்தில் நேற்று இரவு பைக்கில் சென்ற சங்கரலிங்கத்தின் மீது ஆம்புலன்ஸை ஏற்றி கொலை செய்ததாக வாக்கு மூலம் கொடுத்தது போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

image

மேலும் வச்சக்காரப்பட்டி போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி முருகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்