
அறிவழகன் இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார், கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நாயகி, தடைகளை தனக்கே சாதகமாக்கி உச்சம் தொடுபவர் என ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக டோரா படம் ரிலீசானது. தொடர்ச்சியாக வேலைக்காரன், இமைக்கா நொடிகள் உள்பட பல படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.
தற்போது புதிய செய்தி என்னவென்றால், 'ஈரம்', 'குற்றம் 23' பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் புது படம் ஒன்றில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அறிவழகனே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாக உள்ளது. இப்படத்தில் நயன்தாராவின் வேடம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் எனவும் இயக்குனர் அறிவழகன் தெரிவித்துள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.