Published : 16,Nov 2022 12:57 PM

'பொன்னியின் செல்வன் 2' இந்த தேதியில் ரிலீஸ் ஆகிறதா? - கசிந்த மெகா அப்டேட்

Mani-Ratnam-Ponniyin-Selvan-2-to-release-on-THIS-date

பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பால் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி, முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். வசூல் ரீதியாகவும், விமா்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்த இப்படம் இதுவரை ரூ.450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்திற்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பால், இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.

image

முதல் பாகத்தை எடுக்கும்போதே இரண்டாம் பாகத்துக்கான முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டனர். 'பொன்னியின் செல்வன் 2' படத்துக்கு தற்போது டப்பிங், கிராபிக்ஸ், ரீ ரீக்கார்டிங் உள்ளிட்ட  பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதையொட்டி 2 ஆம் பாகத்துக்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையே அதே பெயரில் இரு பாகங்களைக் கொண்ட திரைப்படமாகத் உருவாக்கியிருக்கிறது. இரண்டு பாகமும் ரூ.500 கோடி செலவில் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: ‘படப்பிடிப்பில் எனக்கு ஆச்சர்யமளித்தது இது’ - பொன்னியின் செல்வன் வெற்றிவிழாவில் மணிரத்னம்