Published : 14,Nov 2022 11:39 AM

கேக்கை பாழாக்கிய போதை ஆசாமி.. முகத்தில் குத்து விட்ட மணமகன்.. வைரல் வீடியோவும் பின்னணியும்

Groom-punches-drunk-guest-after-he-ruins-wedding-cake

கொண்டாட்டத்துக்கு ஏற்ற நிகழ்வுகளில் ஒன்றாக திருமண நிகழ்ச்சிகள் இருந்தாலும், அதில் நடக்கும் சண்டை சச்சரவுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள்தான் எப்போதும் நினைவில் இருக்கும். அது தொடர்பான பல பதிவுகள் சமூக வலைதளங்கள் வாயிலாக காணக் கிடைக்கின்றன.

அப்படியான வீடியோதான் தற்போது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. பொதுவாகவே திருமணங்களில் நடக்கும் சடங்குகளை விட கலாட்டாக்களே மனதில் நிற்கும். அந்த வகையில், திருமணத்துக்காக வாங்கி வைத்த கேக்கை போதையில் இருந்த விருந்தினர் ஒருவர் அதனை பாழாக்கினால் நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? அப்படியேதான் இந்த மணமகனும் நடந்துக் கொண்டிருக்கிறார்.

அதன்படி, தன்னுடைய திருமணத்துக்காக ஆசை ஆசையாக வடிவமைக்கப்பட்ட கேக்கை போதையில் இருந்த நபர் வீணாக்கியதோடு, அதை மணமகள் மீது பூசவும் முற்பட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்து மணமக்கள் விலகிப்போன போதும், தான் என்ன செய்கிறோம் என உணர்ந்திராத அந்த விருந்தினர் மணமகனை கட்டியணைக்க சென்றிருக்கிறார்.

அவரது செயலைக் கண்டு ஆத்திரமடைந்த மணமகன் அந்த போதை ஆசாமியை கீழே தள்ளி அவர் முகத்தில் ஒரு குத்தும் விட்டிருக்கிறார். ஒரு வேளை திருமணத்தில் பங்கேற்றிருந்த பிற விருந்தினர்கள் அந்த போதை நபரை மணமகனிடம் இருந்து காப்பாற்றாமல் போயிருந்தால் அங்கு ரத்தக்களரியே ஏற்பட்டிருக்கும்.

இந்த வீடியோதான் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு 10 லட்சத்துக்கும் மேலான இணையவாசிகளால் பார்க்கப்பட்டதோடு பலரும் வேடிக்கையான மற்றும் முகம் சுழிக்கும் வகையிலான கமென்ட்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்