Published : 14,Nov 2022 07:33 AM
`புத்தகங்கள் கொண்டு வரலைனா...’- ஆசிரியரை அடித்து துன்புறுத்திய மாணவர்

உத்தர பிரதேசத்தில் கணித ஆசிரியர் ஒருவரை அவரது மாணவர் அடித்து துன்புறுத்தும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவின்படி, 10-ம் வகுப்பு மாணவனொருவர், பள்ளிக்கு புத்தகங்கள் கொண்டு வராமல் இருந்திருக்கிறார். அதற்காக அவரது ஆசிரியர் பன்கஜ் சிங், மாணவரை திட்டியிருக்கிறார். அதற்கெடுத்த நொடி, அந்த மாணவர் தன் ஆசிரியரை, தள்ளிவிட்டு வகுப்பறையிலிருந்து வெளியேற்றுகிறார். பின் காரிடரில் வைத்து ஆசிரியரை அம்மாணவர் அடித்துக்கொண்டே இருக்கிறார். தொடர்ந்து ஆசிரியரின் சட்டையை பிடித்து அங்கிருந்த பென்ச்சில் இடித்து ஆசிரியரை அடித்திருக்கிறார்.
இந்த ஆசிரியர் பன்கஜ் சிங், அதேபள்ளியில் 2004-ம் ஆண்டு முதல் பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்து அந்த ஆசிரியர் காவல்துறையில் வழக்கு பதிந்திருக்கிறார். மேற்கொண்டு அம்மாணவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி: India Today