Published : 10,Nov 2022 01:31 PM

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 7 பேர் கைது – 75 சவரன் தங்க நகை பறிமுதல்

7-persons-arrested-for-involvement-in-crimes-75-Savaran-gold-jewelery-confiscated

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தொடர் இருசக்கர வாகனம் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்த 7 பேர் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 75 சவரன் தங்கநகை 9 கிலோ வெள்ளி மற்றும் 25 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனம் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்த கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மூன்று தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

image

அதன் பேரில் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள அடகு கடையில் 75 சவரன் தங்கநகை மற்றும் 9 கிலோ வெள்ளி நகையை கொள்ளையடித்து சென்றவர்களை 24 மணி நேரத்தில் பிடித்தனர்,

இதையடுத்து வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுப்பட்ட நபர்களை வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் வாகன தணிக்கையின் போது பிடித்தனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் தொடர் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்ட பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த திவாகர், சதீஷ், கம்பிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த கருணா, பெத்தலேகம் பகுதியைச் சேர்ந்த மெல்வின் சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அப்சல் அகமது மற்றும் கோவிந்தன் ஆகிய ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்,

image

இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை விரைவாக பிடித்த தனிப்படை காவலர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் பாராட்டுகளை தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர் இருசக்கர வாகனம் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை விரைவாக பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மூன்று தனிப்படைகளை அமைக்க உத்தரவிட்டார். அதின் பேரில் மூன்று தனிப்படை காவலர்கள் மாவட்டம் முழுவதும் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுப்பட்டு தங்க நகையை கொள்ளையடித்த நபர்களை 6 மணி நேரத்திலும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்ட கொள்ளையர்களை 24 மணி நேரத்திலும் பிடித்துள்ளனர். அவர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

image

மேலும் மாவட்ட முழுவதும் உள்ள பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பான குற்றவாளிகளை தனிப்படை அமைத்து விரைவாக பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்