Published : 09,Nov 2022 07:00 PM

காதல் திருமணமான 10 நாளில் தாய்வீட்டிற்கு வந்த புதுப்பெண் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு

Newly-wed-woman-committed-suicide-at-Vaniyambadi

வாணியம்பாடியில் காதல் திருமணம் நடந்து 10 நாட்களே ஆன நிலையில் தாய்வீட்டிற்கு வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வினித். இவரும் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியைச் சேர்ந்த நிவேதா என்ற பெண்ணும் தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த போது காதலித்துள்ளனர். இந்நிலையில் இருவரது காதலுக்கும் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இரு வீட்டாரும் திருமணத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் நிவேதா மற்றும் வினித் இருவரும் மறுவீடு அழைப்பிற்காக இன்று காலை வாணியம்பாடியில் உள்ள காமராஜ்புரம் பகுதியில் உள்ள நிவேதாவின் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்பொழுது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிவேதா புடவையின் மூலம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

image

இதனைத்தொடர்ந்து இந்நிகழ்வு குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் நிவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமான 10 நாட்களிலேயே இளம்பெண் உயிரிழந்த நிகழ்வு குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் பிரேமலதா மற்றும் வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்