Published : 09,Nov 2022 01:38 PM

மழைக்காலம் கவனமா இருங்க.. துணி காயப்போடச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Be-careful-in-the-rainy-season-Tragedy-happened-to-a-woman-who-went-to-dry-clothes

திருநின்றவூரில் கொடிக் கம்பத்தில் துணியை காயவைக்க முயன்ற பெண் மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த பள்ளர் காலனி பாலமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்பெண்டர் சத்தியா. இவருக்கு மேகலா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், இன்று கணவர் வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்றிருந்த சமயம் மேகலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மேகலா வழக்கம் போல வீட்டு மொட்டை மாடியில் துணிகளை காய வைத்துக் கொண்டிருந்தார். அப்போது, கொடி கம்பத்தில் மின் வயர் பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது.

image

இதில், மேகலா தூக்கி வீசப்பட்ட நிலையில், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மேகலாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் செவிலியர்கள் மேகலாவை பரிசோதனை செய்து மேகலா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

image

இதையடுத்து அங்கு வந்த திருநின்றவூர் போலீசார், மேகலாவின் உடலை கைப்பற் உடற்கூறாய்வுக்காக றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்