Published : 09,Nov 2022 11:25 AM

விழுப்புரம்: மதுபோதையில் தாயை அடித்துவிட்டு இறந்துவிட்டதாக உயிருடன் புதைத்த மகன்!

Villupuram--Son-who-beat-his-mother-to-death-in-drunkenness-and-buried-her-alive-

மதுபோதையில் மகன் தாயை அடித்து விட்டு இறந்துவிட்டதாக நினைத்து உயிரோடு குழி தோண்டி புதைத்துள்ள சம்பவம் விழுப்புரம் கண்டாச்சிபுரம் அருகே அரங்கேறியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகில் உள்ள வி.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தாய் வீட்டுக்கு சென்ற சக்திவேல் குடும்ப அட்டையை கேட்டுள்ளார். இதனை தாய் அசோதை(75) தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் இன்று அதிகாலை மது போதையில் தாய் வீட்டில் சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார்.

image

அப்போது ஏற்பட்ட தகறாரில் ஆத்திரமடைந்த சக்திவேல் தாய் அசோதையை தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். மதுபோதையில் தாய் இறந்து விட்டதாக எண்ணிய சக்திவேல் வீட்டின் பின்புறத்திலேயே பள்ளம் தோண்டி தாய் அசோதையை உயிருடன் புதைத்துள்ளார்.

image

இது குறித்து தகவலறிந்த அரகண்டநல்லூர் காவல்துறையினர் மது போதையில் இருந்த சக்தி வேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசோதை உடலை தோண்டி எடுப்பதற்காக பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மது போதையில் தாயை அடித்து உயிருடன் புதைத்த மகனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்