Published : 08,Nov 2022 02:25 PM

`அடேய் கேமராமேன்...’- ஸ்மெல்ல வெச்சே சட்டையை கண்டுபிடித்தது பற்றி கலகலத்த அஷ்வின்!

Cricketer-Ashwin-Finally-Reacts-To-His-Jacket-Sniffing-Viral-Video

பொதுவாக வெளியூர்களுக்கு நண்பர்களுடன் கூட்டமாக செல்லும்போது, ஒரேமாதிரி நாமும் நம்ம ஃப்ரெண்டும் ட்ரெஸ் வைத்திருந்தால், `எது நம்ம ட்ரெஸ்’ என்ற குழப்பம் நமக்கு வந்துடும். வெளியூர் ட்ரிப் கூட பரவாயில்லை… ஹாஸ்டல்ல தங்கும்போது இன்னும் மோசம். வெவ்வேறு டிரெஸ் என்றாலும்கூட, சில சட்டைகளையெல்லாம் பார்க்கும்போது `நம்ம ட்ரெஸ்தானா இது’ என்று, நமக்கே நம்ம ட்ரெஸ் மேல சந்தேகம் வந்துவிடும்.

அப்படியிருக்க, ஒரே மாதிரி ஆடை - அதுவும் கிட்டத்தட்ட 12 பேருக்கும் ஒரேமாதிரி ஆடையென்று இருக்கும்போது, அந்த கூட்டத்தில் இருவரின் ட்ரெஸ் கலந்து விட்டால்... அதில் எது யாருடையது என்று எப்படி கண்டுபிடிக்க முடியும் சொல்லுங்கள்?! அதிலும் இனிஷியலோ, எந்த அடையாளமோ, சைஸ் வேரியஷன்கூட இல்லாத அளவுக்கு ஒரேமாதிரியான ட்ரெஸ் என்றால்....! அவ்ளோதான்! அப்படியேயொரு சம்பவம்தான், ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பைக்காக குடிகொண்டிருக்கும் இந்திய அணியின் வீரர் அஷ்வினுக்கும் ஏற்பட்டிருந்தது. அதை அஷ்வின் சாதூர்யமாக நம்ம ஸ்டைல்ல கையாண்டிருக்கிறார். அஷ்வினின் அந்த செயல், கேமிராவிலும் சிக்கியது இன்னும் சுவாரஸ்யம்!

image

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் (நவ. 6) மெல்போர்னில் நடைபெறும் சூப்பர் 12 சுற்றின் கடைசிப் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில், இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் ரன்ரேட் விகிதம் உயர்ந்த நிலையில், மைதானத்தில் நடந்த பல்வேறு ஹைலைட்கள் இணையத்தில் பகிரப்பட்டு வந்தன.

அந்தவகையில், இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டியொன்று கொடுத்திருந்ததும் அதிகம் பரவி வந்தது. இதில்தான் இப்போ சம்பவமே! ரோகித் ஷர்மாவுக்கு பின் அவுட்-ஆஃப் ஃபோக்கஸில் நின்றுகொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின், தனது ஸ்வெட்டர் எதுவென்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தார். ரொம்ப நேரம் ஸ்வெட்டர் எதுவென்று தெரியதாத அஷ்வின், ஒருகட்டத்துக்கு பின் ஸ்வெட்டரை முகர்ந்து பார்க்க தொடங்கிவிட்டார். எது தன்னோட ஸ்வெட்டர் என்று முகர்ந்து பார்த்து கண்டுபிடித்த அஷ்வினின் வீடியோதான் இப்போ சமூகவலைதளங்களில் வைரல்.

பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து, `நம்ம துணி எது என்று கண்டுபிடிக்க, இதுதான் சிறந்த வழி’ `அது  இப்டி திமிங்கலம், ஸ்மெல் பண்ணியே ஸ்வெட்டரை கண்டுபிடிக்கிறீங்க’ என்று ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். `அஷ்வின் அண்ணா சூப்பர்மேசி’ என்ற பெயரிலும் பலர் பகிர்ந்துள்ளனர்.

அப்படி ட்விட்டர் பயனாளி பகிர்ந்த ஒரு வீடியோவை, கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த தனது பக்கத்தில் பகிர்ந்த்ள்ளார். பகிர்ந்ததோடு இல்லாமல், `இந்த வீடியோவை இதுவரை பல தடவை பார்த்துட்டேன். மறுபடி மறுபடி பார்த்து பார்த்து சிரிச்சுகிட்டே இருக்கேன். அஷ்வின்… சரியான ஸ்வெட்டரை தேர்ந்தெடுக்க ,நீங்க யூஸ் பண்ண இந்த டெக்னிக்கோட லாஜிக்கை மட்டும் சொல்லுங்களேன்’ என்று கூறி கலகலத்தார்.

image

இதைக்கண்ட அஷ்வின், தன் பங்குக்கு தானும் அதற்கு ரிப்ளை செய்திருக்கிறார். அதில் அஷ்வின், `அடேய் கேமராமேன்…’ என்றுகூறி கலகலத்த அஷ்வின்,

* ஸ்வெட்டர் Size பார்த்தேன் – கண்டுபிடிக்க முடியல

* அதில் என்னுடைய இனிஷியல் இருக்கிறதா என சரிபார்த்தேன் - அப்பவும் கண்டுபிடிக்க முடியல

* கடைசியாக, பெர்ஃப்யூம் வாசனையை ஸ்வெட்டரில் முகர்ந்து பார்த்தேன்! கண்டுபிடிச்சிட்டேன்!

என்று கூறியிருக்கிறார்.

அஷ்வினின் இந்த ரிப்ளை, சம்பவத்தை இன்னும் கலகலப்பாக்கியுள்ளது! நம்ம நெட்டிசன்களையும் இந்த விஷயத்தில் விட்டுவிட முடியாது. ஃபோக்கஸே இல்லாமல் ஓரமாக நின்றுகொண்டிருந்த அஷ்வினை, தற்போது ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்