Published : 23,Sep 2017 02:40 AM
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அராஜகம்: அறிக்கை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் அராஜகங்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன என அறிக்கை சமர்ப்பிக்குமாறு 22 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 7 மாநிலங்கள் ஏற்கனவே இது குறித்து அறிக்கை அளித்துள்ள நிலையில் மீதமுள்ள 22 மாநிலங்களும் வரும் 13ம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் யாரும் நடவடிக்கை எடுக்காமல் நழுவிவிட முடியாது என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.