Published : 08,Nov 2022 09:35 AM

பயிற்சியின்போது காயம்: அரையிறுதியில் ரோகித் சர்மா விலகலா?

India-Captain-Rohit-Sharma-Sustains-Forearm-Injury-In-Nets-Ahead-Of-T20-World-Cup-SemiFinal-Report

அரையிறுதி போட்டிக்கு இன்னும் 48 மணி நேரமே உள்ள நிலையில் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. சிட்னியில் நாளை (புதன்கிழமை) நடக்கும் முதலாவது அரையிறுதி போட்டியில்  பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.  நாளை மறுதினம் அடிலெய்டில் நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை சந்திக்கிறது.  

image

அரையிறுதி சுற்றுக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் அடிலெய்டில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வலது கையில் பந்து மோதி காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலியால் அலறித்துடித்த ரோகித் சர்மா சிறிது நேரம் ஓய்வில் இருந்த பின்னர் மீண்டும் தனது பயிற்சியை தொடங்கினார். அரையிறுதி போட்டிக்கு இன்னும் 48 மணி நேரமே உள்ள நிலையில் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காயத்தால் எலும்பு முறிவு ஏற்பட்டால் அவர் போட்டியிலிருந்து விலகும் நிலை ஏற்படலாம்.

இதையும் படிக்கலாமே: டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்? எகிறும் எதிர்பார்ப்புகள்!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்