Published : 08,Nov 2022 08:03 AM

'நான் சிவனேனுதானே இருந்தேன்' - மதுபோதையில் பெண்ணை சரமாரியாக தாக்கிய 4 பெண்கள்

On-Camera-4-Drunk-Women-Punch-Kick-Another-Woman-Face-In-Indore

தாக்குதலுக்கு ஆளான பெண், தன்னை எந்த காரணமும் இல்லாமல் 4 பெண்களும் தாக்கியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் 4 பெண்கள் குடிபோதையில் மற்றொரு பெண்ணை சரமாரியாகத் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 4) அன்று நள்ளிரவு 1 மணியளவில் நடந்ததாக தெரிகிறது. அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கும் பெண்கள் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பெண்கள் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி, முகத்தில் குத்தியும், காலால் மிதித்தும், பெல்ட்டால் அடித்தும் சரமாரியாக தாக்கினர். அங்கிருந்த பலரும் காப்பற்ற முன்வராமல் அவர்கள் தாக்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

image

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், தன்னை எந்த காரணமும் இல்லாமல் 4 பெண்களும் தாக்கியதாக புகாரில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட 4 பெண்கள் மீது  ஆபாசமான செயல், வேண்டுமென்றே பிறரை காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் இந்தூரில் உள்ள பூச்சி மருந்து கடையில், விற்பனையாளராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.



இதையும் படிக்கலாமே: `என்னைதான் கல்யாணம் செய்துக்கணும்’- ஆயுதத்துடன் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்