Published : 06,Nov 2022 07:51 PM

முன்விரோதம் காரணமாக நண்பரை ஓட ஓட விரட்டிக் கொலை செய்ய முயற்சி – தலைமறைவாக இருந்த நபர் கைது

Attempted-Murder-of-Friend-Case-Absconder-Arrested

முன் விரோதம் காரணமாக நண்பரை ஓட ஓட விரட்டிக் கொலை செய்ய முயற்சி. தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ரெங்கா நகரைச் சேர்ந்தவர் நிகில். இவர் தனது நண்பர் அரவிந்த் என்பவரிடம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இரவலாக கொடுத்த பைக்கை, அரவிந்த் பணத்திற்காக ஒருவரிடம் அடகு வைத்துள்ளார்.

image

இதனையறிந்த நிகில், அரவிந்திடம் தகராறு செய்து தனது பைக்கை மீட்டு வந்துள்ளார். இதனால் நண்பர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையத்தில் உள்ள நண்பர் வீட்டில் பேசிக்கொண்டிருந்த நிகிலை, அங்கு வந்த அரவிந்த் கூர்மையான கத்தியால் ஓட ஓட வெட்டிவிட்டு தப்பியோடி தலைமறைவானார்.

image

இதில், படுகாயமடைந்த நிகில் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் தலைமறைவாக இருந்த அரவிந்தை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்