Published : 06,Nov 2022 11:22 AM

அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா - ஜிம்பாப்வே உடனான போட்டியில் அணியில் சில மாற்றங்கள்?

T20-World-Cup-India-Predicted-XI-vs-Zimbabwe-Will-Ravichandran-Ashwin-Be-Dropped-For-The-Game

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் இறுதிப் போட்டியில் இன்று மதியம் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மெல்போர்னில் நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது. 'குரூப் 2' பிரிவில் 6 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கும் இந்திய அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. நெதர்லாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்ததால், அந்நாடு அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியது. இந்நிலையில் இந்தியா இன்று தனது கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்த்து விளையாடுகிறது.

குரூர் 2 பிரிவில்  3 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள ஜிம்பாப்வே அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது.  இருப்பினும் பாகிஸ்தானை வீழ்த்தி ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜிம்பாப்வே தனது கடைசி ஆட்டத்தில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்க முயற்சிக்கக் கூடும்.

image

பங்களாதேஷ் அணிக்கு எதிராக கே.எல்.ராகுல் அரை சதம் அடித்து ஃபார்முக்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மாவிடம் இருந்து இன்னும் பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படவில்லை.  இன்றைய ஆட்டத்தில் அவர் அந்த குறையை களைவார் என எதிர்பார்க்கலாம். இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் சிறப்பாக செயல்பட்டாலும் அவரது பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. எனவே இன்றைய ஆட்டத்தில் அஸ்வினுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மெல்போர்னில் இன்று மழை பெய்வதற்கு 30 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்:- இந்தியா: கேஎல் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், ஆர்.அஸ்வின்/யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிக்கலாமே: இந்தியா-ஜிம்பாப்வே போட்டி மழையால் ரத்தானால் என்ன நடக்கும்? காத்திருக்கும் 'ட்விஸ்ட்'

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்