
மரியா புயலால் பாதிப்படைந்த டொமினிகா தீவில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
கரீபியன் பகுதியில் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய மரியா புயலால் டொமினிகா தீவின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் கடந்த இரு தினங்களாக முழு தீவும் இருளில் மூழ்கியுள்ளது. புயலுக்கு இதுவரை 15 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உணவு மற்றும் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் மிகுநத சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகைளை சீர் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.