நியூட்டன் இந்தி திரைப்படம் இந்தியா சார்பில் 2018 ஆம் ஆண்டிற்கான ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
‘சுலேமானி கீடா’ எனும் வித்யாசமான படத்தை தந்த இயக்குநர் அமித் மசூர்கரின் அடுத்த படைப்புதான் நியூட்டன். இப்படம் சத்தீஸ்கர் மாநிலத்தின் நக்சலைட் மோதல்கள் நிறைந்த பகுதியில், உண்மையாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்த முயற்சி செய்யும் ஒரு தேர்தல் அதிகாரியின் நிலையை அரசியல் கலந்த நையாண்டியோடு விவரிக்கிறது. இத்திரைப்படம் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்ற கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ராஜ்குமார் ராவ் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல நடிகர்களான பங்கஜ் திரிபாதி, ரகுபீர் யாதவ் மற்றும் அஞ்சலி பாட்டீல் ஆகியோரும் நடித்துள்ளது இப்படத்தின் கூடுதல் அம்சம்.
ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவின் தேர்வுக்கமிட்டியில் உள்ள அனைவரும் இந்த படத்தை ஆஸ்காருக்கு தேர்வு செய்ய சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு ஆஸ்கருக்கு தேர்வு ஆகியுள்ள 26 படங்களில் ‘நியூட்டன்’ பங்கெடுப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ஆஸ்காருக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தி படக்குழுவை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இப்படம் 90வது அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான இந்திய தேர்வாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை போல் 67 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் நியூட்டன் உலக அரங்கில் முதலிடத்தைத் பெற்றுள்ளது. ’நியூட்டன்’ ஆஸ்காரை வெல்லுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!