Published : 22,Sep 2017 12:39 PM

மகளிர் சிறை கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் உணவகம்

World---s-coolest-new-restaurant-is-in-a-Columbia-women---s-prison

கொலம்பியாவில் உள்ள மகளிர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் சிறை வளாகத்திலேயே உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.‌ இந்த உணவகத்தில் ஆர்வமுள்ள பெண் கைதிகள் பலர் சமையல் கலையை பயின்று வருவதுடன், வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் வெயிட்டர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்‌.

கொலம்பியா நாட்டின்‌ கார்டாஜெனாவில் உள்ள மத்திய மகளிர் சிறைச்சாலையில், சிறை வளாகத்துக்குள்ளேயே உணவகம் திறக்கப்பட்டுள்ளது‌. கைதிகள் மறுவாழ்வு பெற வேண்டும் என்பதற்காக தொலை‌க்காட்சி நடிகையான ஜோஹான ப‌ஹாமோன் மாற்று சிறை நடவடிக்கை என்ற பெயரில் அறக்‌கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்.

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள உணவு விடுதி போன்று வடிவமைக்கப்பட்ட இந்த ‌உணவகத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல சமையல் கலை நிபுணர் தான் தலைமை செஃப்பாக பணியாற்றுகிறார்.

வாடிக்கையாளர்களுக்கு சுவையாக சமைத்து பரிமாறுவதுடன் நின்றுவிடாமல், திருந்தி வாழ விரும்பும் பெண் கைதிகளுக்கு ஆர்வமுடன் சமையல் கலை நுணுக்கங்களையும் கற்று தருகிறார். இதனால் 20-க்கும் மேற்பட்ட கைதிகள் அவரிடம் ஆர்வமுடன் சமையல் பயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சிலர் வெயிட்டர் பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த உணவகம் மட்டுமின்றி கொலம்பியா முழுவதும் உள்ள 25 சிறைகளிலும் கைதிகளின் மறுவாழ்வுக்காக நடிகை பஹாமோனின் அறக்கட்டளை சார்பில் சமையல் கலைக்கான பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 4 ஆயிரம் கைதிகள் பயன் அடைந்திருப்பதை கண்ட சர்வதேச அமைப்புகளும், வங்கிகளும், தற்போது பஹாமோனின் அறக்கட்டளைக்கு உதவ முன் வந்துள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்