Published : 02,Nov 2022 04:27 PM

சிக்ஸரில் சச்சினை நினைவு கூர்ந்த விராட்.. பவுண்டரியில் தோனியை பின்னுக்கு தள்ளிய ரன்மிஷின்!

sachin-virat

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை விராட் கோலி ஃபார்ம் இல்லாமல் சிக்கி தவித்து வருகிறார். ஃபார்ம் இல்லாவிட்டாலும் அவர் ரன் குவிக்க தவறவில்லை. ஆனாலும், முந்தைய போட்டிகளை போல் சதங்கள் விளாச முடியவில்லை என்ற விமர்சனங்கள் அவர் முன் வைக்கப்பட்டன. இருப்பினும், அவர் தன்னுடைய விடா முயற்சியால் மீண்டு வந்தார். தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவரது அசத்தலான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 82, நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 62, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 64 ரன்கள் குவித்து மூன்று போட்டிகளிலும் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற மைல்கல்லை ஜெயவர்த்தனவேவை பின்னுக்குதள்ளி எட்டியுள்ளார்.

தோனியை முந்திய விராட் கோலி!

டெத் ஓவர்களில் அதிக பவுண்டரிகள் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமை இதுவரை முன்னாள் கேப்டன் தோனியின் வசமே இருந்து வந்தது. தற்போது அது விராட் கோலியின் வசம் வந்துவிட்டது. தோனி 104 பவுண்டரிகள் அடித்திருந்த நிலையில் கோலி 106 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹர்திக் பாண்ட்யா 83, ரெய்னா 57, தினேஷ் கார்த்திக் 53 பவுண்டரிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

நடப்பு டி20 தொடரில் அதிக ரன்கள்!

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி இதுவரை 3 அரைசதங்களுடன் 220 ரன்கள் எடுத்துள்ளார். நடப்பு தொடரில் இதுதான் இதுவரையிலான அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஒரு போட்டியில் மட்டுமே சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற மூன்று போட்டிகளிலும் அசத்தியுள்ளார்.

image

சச்சினை நினைவுபடுத்திய விராட்!

சச்சின் டெண்டுல்கர் பல விதமான ஷாட்களை அடிப்பதில் வல்லவர். அதில் முக்கியமான வகை நேர் லாங் ஆன் திசையில் அழகாக சிக்ஸர் விளாசுவதுதான். அவர் அடிக்கும் சிக்ஸர் சரியாக எல்லைக் கோட்டை தாண்டி சற்றே அருகில் விழும். அதேபோன்றதொரு ஷாட்டை இன்று விராட் கோலி விளாசினார். 19 வது ஓவரின் கடைசி பந்தில் இந்த சிக்ஸரை அடித்தார். ரசிகர்கள் பலரும் விராட் கோலியின் இந்த சிக்ஸரை சச்சின் அடிக்கும் சிக்ஸருடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்..https://twitter.com/manish_meena___/status/1587744204494888962

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்