Published : 02,Nov 2022 03:53 PM

திருமணத்தை உறுதி செய்த ஹன்சிகா - பிவி சிந்து முதல் அனுஷ்கா ஷெட்டி வரை குவியும் வாழ்த்துகள்

Hansika-Motwani-gets-engaged-to-Sohael-Khaturiya-Anushka-Shetty-to-PV-Sindhu-celebs-wish-the-couple

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது வருங்கால கணவரை சமூகவலைத்தளம் மூலமாக வாயிலாக அறிமுகப்படுத்தியுள்ளநிலையில், அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷின் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து ஜெயம் ரவியின் ‘எங்கேயும் காதல்’, விஜய்யின் ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘அரண்மனை’ உள்பட பல படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக இவர் நடிப்பில் இவரது 50-வது படமாக ‘மஹா’ வெளியானது. மேலும் தமிழ், தெலுங்கு உள்பட சில பெயரிடப்படாதப் படங்களில் ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார்.

image

கடந்த சில வாரங்களாகவே அவரது திருமணம் குறித்து தகவல் பரவி வந்தநிலையில், தனது வருங்கால கணவரை ஹன்சிகா மோத்வானி அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈபிள் டவர் முன்பு தொழிலதிபர் சோஹெல் கத்தூரியா, தனக்கு ப்ரொபோஸ் செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ‘இப்போதும், எப்போதும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வருகிற 4-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா பேலஸில் மிகப் பிரம்மாண்டமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது வருங்கால கணவரை ஹன்சிகா அறிமுகப்படுத்தியநிலையில் அவருக்கு, நடிகைகள் குஷ்பூ சுந்தர், அனுஷ்கா ஷெட்டி, ஸ்ரேயா ரெட்டி, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து உள்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்