Published : 01,Nov 2022 12:13 PM

zoom காலில் வீட்டை சுத்திக்காட்டச் சொன்ன பாஸ்.. மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Employee-Given-More-Work-For-Not-Giving-Boss-A-Home-Tour-During-Zoom-Call

பணியிடத்தில் எப்போதும் வேலை நிமித்தமாக பல கெடுபிடிகள், தொந்தரவுகள் ஊழியர்களுக்கு ஏற்படுவதுண்டு. சமயங்களில் உடன் பணிபுரிபவர்களாலும், உயர் அதிகாரிகளாலும் குடைச்சல் கொடுக்கும் நிகழ்வுகளும் அரங்கேறுவதுண்டு.

இப்படி இருக்கையில் பெண் ஒருவரிடம் zoom மீட்டிங்கின் போது தனது வீட்டை முழுவதும் காண்பிக்கும்படி அவரது பாஸ் கேட்க அதற்கு அந்த பெண் மறுக்கவே அவருக்கு அதிகபடியான வேண்டாத வேலைகளை கொடுத்ததோடு, முக்கியமான மீட்டிங்கில் இடம்பெறாத வகையிலும் செய்திருக்கிறாராம்.

இது தொடர்பாக டிக்டாக் தளத்தில் வீடியோ வெளியிட்டு தனது மனவேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார் அந்த பெண். அதன்படி அலியா என்ற பெண்ணின் டிக்டாக் வீடியோவில், “பொதுவாக எல்லோரும் தாங்கள் செய்யும் வேலையால் கடுப்பாவார்கள். ஆனால் பாஸ்-க்கு தன்னுடைய வீட்டை முழுவதும் சுற்றிக்காட்டாமல் இருந்ததால் இரண்டு பெரிய புரோஜெக்ட்களை கொடுத்து அதனை குறுகிய காலத்திற்குள் முடிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

image

மேலும், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அலுவலக வேலையையும் தனித்தனியே பார்ப்பதாகவும், பெர்சனல் வாழ்க்கைக்கு கூடுமானவரையில் ப்ரைவசியோடு இருக்க வேண்டும் என நினைப்பதாகவும் அந்த வீடியோவில் அலியா தெரிவித்துள்ளார்.

இதுபோக, தனது பாஸ்-ன் ஆளுமையுடன் ஒத்துப்போகாமல் இருந்ததால் அலியாவிடம் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவர் தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறார். இது இருவருக்குமிடையே முரண்பாட்டை ஏற்படுத்தியிருந்த நிலையில், வாராந்திர வீடியோகால் மீட்டிங்கின் போது வெளிப்பட்டிருக்கிறது.

அப்போது வீடியோ காலில் இணையும் போது அலியாவின் வீட்டில் இருந்த வைஃபை வேலை செய்யாமல் போனதும் தனது பாஸ்-க்கு அவர் தகவல் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு உடனே வைஃபை சரியானதால் மீட்டிங்கில் இணைந்த போது அலியாவிடம் வீட்டை சுற்றிக் காட்ட கேட்டிருக்கிறார் பாஸ். அதற்கு மறுக்கவேதான் அதிக வேலை கொடுத்து அலைக்கழித்திருக்கிறார்.

இதனால் அலியா தனது பாஸிடம் “ஒரு நல்ல செய்தி. இனி நான் இங்கு வேலை செய்யப்போவதில்லை” எனக் கூறியிருக்கிறார். அலியாவின் வீடியோவை கண்ட டிக்டாக் பயனர்கள் பலரும் அவரது முடிவுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, தங்களது முதலாளியால் நடந்த குடைச்சல்கள் குறித்து தத்தம் புலம்பல்களை கொட்டித் தீர்த்திருக்கிறார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்