Published : 01,Nov 2022 11:30 AM

நியூசிலாந்து, வங்கதேச தொடர்: 4 வகையான இந்திய அணி அறிவிப்பு - யார் உள்ளே, யார் வெளியே?

Who-is-in-who-is-out-A-look-at-all-the-changes-in-Team-India-T20I-ODI-and-Test-squads-for-NZ-BAN-series

நியூசிலாந்து மற்றும் வங்காளதேச சுற்றுப்பயணத்திற்காக 4 வகையான இந்திய அணியை அறிவித்திருக்கிறது பிசிசிஐ.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு, இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்காள தேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இதையொட்டி நியூசிலாந்து மற்றும் வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான 4 வகையான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.

image

நியூசிலாந்து சுற்றுப்பயணம்

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. டி20 தொடர் வரும் நவம்பர் 18ஆம் தேதியும்,  ஒருநாள் தொடர் வரும் 25ஆம் தேதியும் தொடங்குகிறது. பணிச்சுமையை கருத்தில் கொண்டு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், அஸ்வின், தினேஷ் கார்த்திக், முகமது ஷமி உள்ளிட்டோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் பல இளம் வீரர்களுக்கு இந்த நியூசிலாந்து தொடருக்கான அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையிலும், டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலும்  இந்திய அணி களமிறங்குகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆடும் இந்திய அணி: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), சுப்மான் கில், இஷன் கிஷான், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், புவேனஷ்வர்குமார், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடும் இந்திய அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), சுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், ஷபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.

image

வங்கதேசம் சுற்றுப்பயணம்

நியூசிலாந்து சுற்றுப்பயணம் முடிந்ததும் இந்திய அணி வங்காள தேசத்துக்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 4ஆம் தேதியும், டெஸ்ட் தொடர் டிசம்பர் 14ஆம் தேதியும் தொடங்குகிறது. நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்டோர் வங்காளதேச தொடரில் விளையாட உள்ளனர். காயத்தால் டி20 உலகக் கோப்பை போட்டியில் இடம் பெறாத ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வங்காளதேச தொடர் மூலம் அணிக்கு திரும்புகிறார். அதேநேரத்தில் முதுகில் ஏற்பட்ட காயத்தால் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த இரண்டு தொடரிலும் இடம்பெறவில்லை.

வங்காளதேசத்துக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயாள்.

வங்காளதேசத்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், கே.எஸ்.பரத், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

இதையும் படிக்கலாமே: 'ஓய்வுக்குப் பின் போதைப் பழக்கத்துக்கு அடிமையானேன்' - மனம்திறந்த வாசிம் அக்ரம்!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்