Published : 30,Oct 2022 05:29 PM

பவுலிங்கில் தெறிக்கவிடும் தென் ஆப்பிரிக்கா... இந்திய அணி சொதப்பல் ஆட்டம்

India-vs-South-Africa-India-opt-to-bat

தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடியின் வேகத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுருண்டனர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்12 சுற்றில் இன்று இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெர்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று  முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடியின் வேகத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுருண்டனர். 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் அவர்.  

ரோகித் சர்மா 9 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 15 ரன்களுடனும், விராட் கோலி 12 ரன்களுடனும், தீபக் ஹூடா ரன் எதுவும் எடுக்காமலும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களுடனும் வெளியேறி அதிர்ச்சியளித்துள்ளனர். 12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்