ம.பி: சிறுவர்களை அடித்து லாரியில் கட்டி தரதரவென இழுத்துச்சென்ற கொடூரம் #viralvideo

ம.பி: சிறுவர்களை அடித்து லாரியில் கட்டி தரதரவென இழுத்துச்சென்ற கொடூரம் #viralvideo
ம.பி: சிறுவர்களை அடித்து லாரியில் கட்டி தரதரவென இழுத்துச்சென்ற கொடூரம் #viralvideo

பணத்தைத் திருடியதாகக் கூறி இரண்டு சிறுவர்களை அடித்து, லாரியின் பின்புறம் கட்டி இழுத்துச்செல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் மத்திய பிரதேசத்திலுள்ள ஒரு கூட்டநெரிசல் மிக்க மார்க்கெட்டில் நடந்துள்ளது.

இந்தூரிலுள்ள சோய்த்ரம் மார்க்கெட்டில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையங்களில் வேகமாக பரவிவருகிறது. மார்க்கெட்டுக்கு வந்த காய்கறிகளை ஏற்றி இறக்கும்போது சிறுவர்கள் லாரியில் வைத்திருந்த பணத்தைத் திருடியதாகக் கூறப்படுகிறது. சிறுவர்கள் பணத்தை எடுப்பதைப் பார்த்ததாக லாரி ஓட்டுநர் கூறியதை அடுத்து, இரண்டு வியாபாரிகளும், லாரி ஓட்டுநரும் சிறுவர்களை சரமாரியாக அடித்து தாக்கி, லாரியின் பின்புறம் சிறுவர்களின் கால்களை கயிறுகளால் கட்டி உடல் சாலையில் கிடக்க, காய்கறி மார்க்கெட் முழுவதும் இழுத்துச்சென்றனர்.

திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவர்களை காவல்நிலையம் அழைத்துச்சென்ற போலீசார், அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

சிறுவர்களை அடித்து இழுத்துச்சென்ற விதம் மிகவும் கொடூரமானதாக இருந்தது எனவும், எனவே அவர்களை தாக்கியவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்தூர் காவல்நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com