[X] Close

தூய்மையே கடவுள்: நடிகர் ரஜினிகாந்த்

Purity-is-God--actor-Rajinikanth

பிரதமர் மோடியின் தூய்மையே சேவை திட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ‘தூய்மையே கடவுள்’ என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ள தூய்மையே சேவை பரப்புரையில், இந்தியாவின் பிரபலங்கள் பலரும் இணைந்து வருகின்றனர். நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், திரை நட்சத்திரங்கள் அக்ஷய் குமார், அனுஷ்கா சர்மா ஆகியோர் தூய்மையே சேவை பரப்புரையின் ஒரு பகுதியாக, கழிவறைகள் கட்டும் பணியை ஊக்கப்படுத்த முன்வந்துள்ளனர். அத்துடன் தொழிலதிபர் அனில் அம்பானியின் மனைவி நீதாவும் இத்திட்டத்தில் இணைந்துள்ளார். 

இந்நிலையில் பிரதமரின் தூய்மையே சேவை திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த முழு ஆதரவு தெரிவிப்பதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ‘தூய்மையே கடவுள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close