Published : 22,Sep 2017 05:23 AM

மெர்சல் டீசர்... பிரபலங்கள் வாழ்த்து

Mersal-Teaser-----celebrity-greetings

நடிகர் விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் டீசருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

'மெர்சல்' படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டீசரை திரையுலக பிரபலங்கள்  டிவிட்டரில் புகழ்ந்துள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன், ’#MersalTeaser மிரட்டல்’ என கூறியுள்ளார். இயக்குனர் மோகன் ராஜா ‘விஜய்ன்னா மாஸ் இல்லை, மாஸ்ன்னாலே விஜய்தான்.. லவ் யூ நண்பா’ என தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் ’இளையதளபதி ராக்கிங்’ என பதிவிட்டுள்ளார். காமெடி நடிகர் சதீஷ் ’தெறிக்குது தலைவா’ என கூறியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா ’இன்னிக்கே தீபாவளி மாதிரி இருக்குது. அப்ப தீபாவளிக்கு?’ என பதிவிட்டுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ், ’மிரட்டும் மெர்சல்’ என கூறியுள்ளார். பாடலாசிரியர் தாமரை, ’பாரம்பரியத்தை முன்னிறுத்தும் மெர்சல் முன்னோட்டத்தை ரசித்தேன்’ என தெரிவித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவி, ‘சூப்பர் டீசர்’ என கூறியுள்ளார். நடிகர் ஆர்யா, ’பெருமையாக உள்ளது ப்ரோ’ என பதிவிட்டுள்ளார். நடிகை சமந்தா ’அமேசிங்’ என பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்