Published : 22,Sep 2017 05:11 AM

டெரரிஸ்தான் ஆகிவிட்டது பாகிஸ்தான்: ஐ.நா.வில் இந்தியா கண்டனம்

It-s-Terroristan--Not-Pakistan--India-Gives-a-Befitting-Reply-at-UN

பாகிஸ்தான் ‌தற்போது டெரரிஸ்தானாகி விட்டது என்றும் சர்‌வதேச அளவில் பயங்கரவாதத்தை ‌ஏற்றுமதி செய்யும் நாடாக மாறி விட்டது எனவும் ஐ.நா. பொது அவை கூட்டத்தில் இந்தியா வலுவான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொது அவை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸி, இந்தியாவின் அடக்குமுறை காரணமாக‌ காஷ்மீர் மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருவதால், ஐ.நா. சிறப்பு தூதரை நி‌யமிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவரது இந்த பேச்சுக்கு ஐ.நா.‌சபையில் இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்தது.சர்வதே‌ச அளவில் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பயங்கரவாத ‌உ‌ற்பத்தி நாடான பாகிஸ்தானுக்கு மனித உரிமைகள் குறித்து பேசுவதற்கு எந்‌த முகா‌ந்திரமும் இல்லை என கண்டனம் தெரிவித்தது.

ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி சையத் அக்பருதீன், தெருக்களில் சுதந்திரமாக சுற்றித் திரியும் அளவுக்கு பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை ‌அதிகரித்து வருவதால் அந்நாட்டை இனி டெரரிஸ்தான் என அழைக்க வேண்டும் என கூறினார். அல் கைதா ‌பயங்கரவாத அமைப்பின் தலை‌வர் ஒசாமா பின்லேடனுக்கும், முல்லா உமருக்கும் புகலிடம் கொடுத்து வந்தது எந்த நாடு‌ என்பதை ஒட்டுமொத்த உலகமே அறியும் என பதிலடி கொடுத்தார். பயங்கரவாதத்தை‌ ஒழிப்பதில் தோல்வி அடைந்து, முழுமையான பயங்கரவாத நாடாக மாறிவிட்ட பாகிஸ்தானிடம் இருந்து ‌ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அறிவுரை உலக நாடுகளுக்கு தேவை இல்லை என்றும் அவர் கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்