Published : 28,Oct 2022 12:28 PM

'தலா ஒரு புள்ளிகள்' மழையால் ரத்தானது ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையிலான போட்டி

Afghanistan-Ireland-Match-abandoned-without-a-ball-bowled

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கிடையேயான ஆட்டம் 'டாஸ்' போடுவதற்குக் கூட வாய்ப்பில்லாமல் கைவிடப்பட்டது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு ஆப்கானிஸ்தான் அணியும், அயர்லாந்து அணியும் மெல்போர்ன் மைதானத்தில் மோத இருந்தன. ஆனால் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பிறகு டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

image

இந்நிலையில் மெல்போர்னில் மழை விடாமல் பெய்து வருவதால் ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கிடையேயான ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'டாஸ்' போடுவதற்குக் கூட வாய்ப்பில்லாமல் கைவிடப்பட்டதால் இரு அணி வீரர்களும் ஏமாற்றமடைந்தார்கள். இந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் கடைசி இரு ஆட்டங்கள் மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு இதே மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

இதையும் படிக்கலாமே: டி20 உலகக் கோப்பை: வெற்றிக்கு மல்லுக்கட்டும் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து... இன்று பலப்பரீட்சை

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்