Published : 27,Oct 2022 01:07 PM

தீபாவளி சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசுக்கு எத்தனை கோடி வருமானம் தெரியுமா?

Do-you-know-how-many-crores-the-Tamil-Nadu-government-earns-in-Diwali-Special-Buses

தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கியதன் மூலம் தமிழக அரசுக்கு 9.54 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம்  முழுவதும் சிறப்பு பேருந்துகள் கடந்த 21ஆம் தேதி முதல் 23 வரை இயக்கப்பட்டது. இதில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் என 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.  மேலும் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு தேவையான அளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. 

தீபாவளி சிறப்பு பேருந்து: பூந்தமல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் | Deepavali special bus Heavy traffic in Poonamallee | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News ...

பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர், மாதவரம் என  5 மையங்களில் இருந்து பேருந்து இயக்கப்பட்டது. பயணிகள் வசதிக்காக 11 முன்பதிவு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ததில் முன்பதிவு செய்து மட்டுமே ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் பயணம் செய்து இருப்பதாகவும், மேலும் தமிழக அரசுக்கு 9.54 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்து இருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்