Published : 26,Oct 2022 08:15 PM

கேப், ஆட்டோ ஓட்டுநர்கள் மீது தொடர்ந்து எழுந்த புகார்கள் - அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

Cab-auto-drivers-in-TN-to-pay-Rs-50-500-fine-for-cancelling-rides

தமிழகத்தில் ஆப் மூலம் செய்யப்படும் இருசக்கர, ஆட்டோ, கேப் முன்பதிவுகளை ஓட்டுநர்கள் ரத்து செய்தால் ரூ.50 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபகாலமாக தமிழகத்தில் டாக்சி, ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகளின் சேரும் இடம் அல்லது கட்டணம் செலுத்தும் முறை பற்றி கேட்ட பிறகு சவாரி ரத்து செய்கின்றனர். இதனால் பல சிரமங்கள் ஏற்படுவதாகவும் பல புகார்கள் எழுந்தன.

image

இதனையொட்டி, போக்குவரத்து விதிமீறலுக்கான ஸ்பாட் அபராதங்களை மாநில அரசு திருத்தி அமைத்துள்ளது. பயணிகளை ஏற்றிச்செல்ல மறுத்தால் சட்டப்பிரிவு 178(3) ஏ-இன் கீழ் ரூ.50 அபராதம் விதிக்கப்படும். ஆப்கள் மூலம் செய்யும் பைக், கேப், ஆட்டோ முன்பதிவுகளை ஓட்டுநர்கள் ரத்து செய்தால் மோட்டர் வாகன சட்டம் 1988ன் பிரிவு 178(3)பி-யின் கீழ் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

image

இதையும் படியுங்கள் - தமிழ்நாடு போக்குவரத்து விதிகளில் அதிரடி மாற்றம் - எந்தெந்த குற்றத்திற்கு எவ்வளவு அபராதம்?

இதுகுறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், ’’ இந்த மோட்டார் வாகன திருத்தச் சட்டம் 2019ஐ அமல்படுத்துவதால் தவறு செய்யும் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது தவறில்லை. ஆனால் தவறு செய்யாத ஆட்டோர் ஓட்டுநர்கள் பாதிக்கப்படக்கூடாது. ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்