திருப்பதி: ஏழுமலையான் கோயில்: இலவச சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் இன்று வெளியீடு

திருப்பதி: ஏழுமலையான் கோயில்: இலவச சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் இன்று வெளியீடு
திருப்பதி: ஏழுமலையான் கோயில்: இலவச சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் இன்று வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கான மூத்த குடிமக்கள் மாற்று திறனாளிகளுக்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் https://tirupatibalaji.ap.gov.in வெளியிடுகிறது.

ஒரு நாளைக்கு 1000 டிக்கெட்கள் வழங்கப்பட உள்ள நிலையில், இந்த டிக்கெட்களை முன்பதிவு செய்தவர்கள் தினந்தோறும் பிற்பகல் 3 மணிக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலவச தரிசன சிறப்பு டிக்கெட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com