Published : 24,Oct 2022 05:52 PM
’கிங்’ கோலியின் சாதனையை போற்றிய ஸ்விக்கி.. வைரலாகும் கூப்பன் code!

இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டத்தை காட்டிலும் டி20 உலகக் கோப்பை தொடரின்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்திய அணி வீழ்த்தி வென்ற வரலாற்று நிகழ்வுதான் இளசுகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மெல்பர்னில் நடந்த சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியபோது கிரிக்கெட் ரசிகர்களின் பல்ஸ் பல மடங்கு அதிகரித்தே காணப்பட்டிருக்கும். 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பயணித்தது இந்திய அணி.
இதில், 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்ததோடு கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார் விராட் ’கிங்’ கோலி. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கோலியின் சராசரி 308 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றியோடு, விராட் கோலியும் கம்பேக் கொடுத்திருந்தது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றதோடு மீம்ஸ்கள், பதிவுகள் அனைத்தும் பறந்து வருகிறது.
Well done, @Swiggy
— Sohini M. (@Mittermaniac) October 23, 2022
This is superb moment marketing! pic.twitter.com/8SFeWb7LnA
இந்த நிலையில், இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி, டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிகெட் அணியில் வரலாற்று வெற்றி பெற்றதையும், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்ததை கொண்டாடும் வகையில் KINGKHOLI82 என்ற ஆஃபர் கூப்பனை அறிமுகம் செய்திருக்கிறது.
இது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்டை இணையவாசி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “சிறப்பான செயல் ஸ்விக்கி. இது ஒரு சிறந்த மார்க்கெட்டிங் உத்தி” எனக் கேப்ஷன் இட்டிருந்தார். இந்த ட்வீட்டுக்கு கிட்டத்தட்ட 3,500க்கும் மேலானோர் லைக் செய்திருக்கிறார்கள்.