டி20 உலகக் கோப்பை: தஸ்கின் அகமது வேகத்தில் சுருண்டது நெதர்லாந்து

டி20 உலகக் கோப்பை: தஸ்கின் அகமது வேகத்தில் சுருண்டது நெதர்லாந்து
டி20 உலகக் கோப்பை: தஸ்கின் அகமது வேகத்தில் சுருண்டது நெதர்லாந்து

டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேச அணி வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஹோபர்ட் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை சந்தித்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அஃபிஃப் ஹொசைன் 27 பந்துகளில் 38 ரன்களும், சாண்டோ 20 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர். நெதர்லாந்து தரப்பில் வான் மீகெரென், பாஸ் டி லீடே ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நெதர்லாந்து அணி தடுமாறிக்கொண்டிருக்க, கொலின் அக்கர்மேன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் மற்ற பேட்ஸ்மேன்கள் அவருக்கு  ஒத்துழைக்காததால் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணியில் கொலின் அக்கர்மேன்தன் தனது பங்குக்கு 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com