Published : 21,Oct 2022 07:44 PM

‘மாணவி சத்யா கொலை வழக்கில் தகவல் தெரிவிக்கலாம்’ - தொடர்பு எண்ணை வெளியிட்ட சிபிசிஐடி

CBCID-has-given-contact-number-to-give-information-about-student-Sathya-murder-case
பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யாவை கொலை செய்ததை நேரில் பார்த்த நபர்கள் சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தகவல் தெரிவிக்கும் நபர்கள் குறித்து விவரம் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி மதியம் நடைபெற்ற கொலை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி-யில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலைவழக்கில் சத்யாவை ரயிலில் தள்ளிவிட்ட சம்பவத்தை நேரில் பார்த்த நபர்கள், செய்திதாள்களுக்கு தகவல் கொடுத்த நபர்கள் மற்றும் Youtube சேனல்களில் பேட்டி கொடுத்த நபர்கள் யாரேனும் இருந்தால் இச்சம்பவம் தொடர்பாக, தகவல் சொல்ல விரும்பினால் சொல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
அவர்கள் இவ்வழக்கை விசாரணை செய்யும்  செல்வகுமார், காவல் துணை கண்காணிப்பாளர், 9498142494 க. ரம்யா, காவல் ஆய்வாளர், காவல் கட்டுப்பாட்டு அறை, குற்றப் புலனாய்வுத்துறை, 9498104698, குற்றப்பிரிவு 04428513500 ஆகிய கைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் தகவல்களை மின்னஞ்சல் மூலமாகவும் (dspoc2cbcid@tn.gov.in ) தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் நபர்கள் குறித்த விவரங்களை வெளியீடு மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்