Published : 21,Oct 2022 02:40 PM
"அர்னால்டு ஆற்றலும் ஐன்ஸ்டீன் அறிவும்.."- ரஜினி ஸ்டைலில் தக்காளியை ஏற்றிய நபர் #ViralVideo

தொழிலாளர்கள் தங்களுடைய வேலையை எளிதாக்க செய்யும் உத்திகள் எப்போதும் கவருவதுண்டு. மெஷினை காட்டிலும் வேகமாக வேலை செய்து அசத்துவது உள்ளிட்ட பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காணக் கிடைப்பதுண்டு. அந்த வகையில் அறுவடை செய்யப்பட்டப்பட்ட தக்காளியை சாமர்த்தியமாக ட்ரக்கில் போடும் ஊழியரின் செயல் குறித்த வீடியோ கோடிக்கணக்கான நெட்டிசன்களை கவர்ந்திருக்கிறது.
ஒற்றையாளாக பெரிய ட்ரக் வண்டியில் தக்காளியை ஏற்றுவது என்பது கடினமான செயலாகவே இருக்கும். அதற்கு குறைந்து மூன்று பேராவது ஆட்கள் தேவைப்படும். ஆனால் அந்த நபரோ அசாத்தியப்படுத்தியிருக்கிறார்.
Power of Arnold, brain of Einstein pic.twitter.com/3W0dL3c1Dt
— Sagar (@sagarcasm) October 18, 2022
அதன்படி, அறுவடை செய்த தக்காளியை ஒரு கூடையில் போட்டு அதனை கீழே நின்றபடியே ட்ரக் வண்டிக்குள் தூக்கி எறிய அந்த கூடையில் இருந்த தக்காளிகள் அனைத்தும் அலேக்காக ட்ரக்கில் விழவும், அதே சமயத்தில் அந்த கூடையும் பூமராங்கை போல அவரிடமே செல்கிறது. இப்படியாக கட கடவென ட்ரக்கை தக்காளியால் நிரப்பியிருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டதோடு, அதில் ”அர்னால்டு போன்ற ஆற்றலும், ஐன்ஸ்டீன் போன்ற மூளையும் கொண்ட நபர்” என கேப்ஷன் இடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோ 10.5 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு கோடியே 5 லட்சத்துக்கும் மேலானோர் பார்த்து வியந்திருக்கிறார்கள்.
When you studied only till 10 std, enough to understand the concept of centripetal force, but could not get a office job.
— बाल्टी लोटा (@balti_lota) October 18, 2022
இதனைக் கண்ட நெட்டிசன்கள், பலரும் அந்த தொழிலாளியின் அறிவார்ந்த மூளையை எண்ணி வியந்து பாராட்டித் தள்ளியிருக்கின்றனர். அதில், centripetal force என்ற மையவிலக்கு விசை ஃபார்முலாவை அவர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் என ஒரு இணையவாசி பதிவிட்டிருக்கிறார்.
அதன்படி, “மையவிலக்கு விசையின் ஃபார்முலாவை தெரிந்துக்கொள்வதற்கு வெறும் 10ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது” என ஒருவர் ட்வீட்டியிருக்கிறார். அதேபோல, சிவாஜி படத்தில் ரஜினி சுயிங்கம்மை ஸ்டைலாக வாயில் போடுவது போன்று தக்காளியை ட்ரக்கில் ஏற்றுகிறார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.