வாக்குப்பதிவில் திடீரென எழுந்த முறைகேடு புகார்.. சசிதரூர் மகனின் ட்விட் எழுப்பும் சந்தேகம்

வாக்குப்பதிவில் திடீரென எழுந்த முறைகேடு புகார்.. சசிதரூர் மகனின் ட்விட் எழுப்பும் சந்தேகம்
வாக்குப்பதிவில் திடீரென எழுந்த முறைகேடு புகார்.. சசிதரூர் மகனின் ட்விட் எழுப்பும் சந்தேகம்

காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்று புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வான நிலையில், சசி தரூம் மற்றும் அவரது மகன் இஷான் தரூம் ட்விட்டரில் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். 

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் 17ம் தேதி நடைப்பெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவும், கேரளாவை சேர்ந்த சசி தரூரும் போட்டியிட்டனர். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார், சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முறைகேடு புகார் என்னாச்சு? 

ஆனால் இன்று வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று கொண்டிருக்கும் போது, இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக வேட்பாளர் சசிதரூரின் ஆதரவாளர்கள் திடீரென குற்றம்சாட்டினர். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் வாக்குப்பதிவில் மிக அப்பட்டமான முறைகேடுகள் நடந்துள்ளன. அங்கு நடைபெற்ற தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை. யாரென்று தெரியாத நபர்கள் வாக்களிக்கும் அறைகளில் இருந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

எனவே, உத்தரபிரதேசத்தில் பதிவான வாக்குகளை செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதனன் மிஸ்திரியிடம் கடிதம் மூலமாக புகார் அளித்தனர். இந்த செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே சசிதரூர் ஆதரவாளரான சல்மான் அனீஸ் தனது ட்விட்டரில், ‘’ குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்துவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனவே வாக்கெடுப்பை தொடர்ந்து நடத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம்" என்றார். பின்னர் அடுத்த ஒரு மணிநேரத்திலேயே மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார் என அறிவிப்பு வெளியானது. இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த விளக்கமும் கட்சி தரப்பிலிருந்து கொடுக்கவில்லை.

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சசி தரூர் வாழ்த்து” 

இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டரில், ‘’காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கார்கே தான் 24 ஆண்டுகளில் காந்தி அல்லாத முதல் காங்கிரஸ் தலைவர். தலைமைக்காகவும், மிக முக்கியமான தருணங்களில் ஆணிவேராக இருந்ததற்காகவும், வெளியேறும் தலைவர் சோனியா காந்திக்கு நாங்கள் ஈடுசெய்ய முடியாத கடனைக் கொண்டுள்ளோம். சுதந்திரமான மற்றும் நடுநிலையான காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு ஒத்துழைப்பு கொடுத்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோருக்கு எனது நன்றிகள். நேரு-காந்தி குடும்பம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது “ என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

சசிதரூர் மகன் வாழ்த்தில் உள் அர்த்தம் இருக்கிறதா?

மேலும் சசி தரூரின் மகன் இஷான் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’என் தந்தையை நினைத்து பெருமை கொள்கிறேன். கட்சியில் தந்தைக்கு எதிராக பல சக்திகள் செயல்பட்டு இருந்தாலும் கூட போட்டியில் நேர்மையான சண்டை போட்டு, போட்டியை கடினமாகியுள்ளார். ஒரு கற்பனைக்கு, இதுவே ஒரு அமெரிக்க பாணி தேர்தல் ஆக இருந்திருந்தால், தேர்தல் முடிவு வேறாக அமைத்திருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com