Published : 21,Sep 2017 02:25 PM

ஐந்து லட்சம் லைக்ஸ்: சாதனை புரிந்தது மெர்சல் டீசர்

vijay-teaser-61

 

இரண்டு மணிநேரத்தில் 5 லட்சம் லைக்ஸ் அள்ளியது மெர்சல் டீசர். இதுவரை இருந்த சாதனை எல்லாம் முறியடித்தது.

அட்லீ பிறந்தநாள் பரிசாக மெர்சல் டீசர் இன்று வெளியானது. அந்த டீசர் வெளியான ஒரு மணி நேரத்திற்குள் 4 லட்சம் லைக்ஸ் ஐ அள்ளியது. அதிக பொருட்
செலவில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் காட்சிகள் தனது பிரமாண்டத்தை நிரூபிக்கிறது. விஜய்யை மட்டுமே மையமாக வைத்து சுற்றிச் சுழலும் டீசர்,
அவரது ரசிகர்களுக்கு சரியாக தீனியை போட்டிருக்கிறது. டீசர் தொடக்கத்திலேயே ‘பற்றியெரியும் நெருப்பொன்று. பற்றி எரிய உனைக் கேட்கும்’விஜய் என
உச்சரிக்கும் வசனங்கள் வெறும் வார்த்தையாக இல்லாமல் அரசியல் வாடையை அள்ளித் தெளிக்கிறது. ’நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க
காத்திருக்கும்’எனும் வரிகளை அழுத்தி உயர்த்தி விஜய் உச்சரித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. எப்படியும் இந்த டீசர் விடியற்
காலைக்குள் பத்து லட்சத்தை எட்டிவிடும் என நெட்டிசன்கள் தட்டி விடுகிறார்கள் தகவலை.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்