பெப்சியில் மீண்டும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று டெக்னிஷியன் யூனியன் வலியுறுத்தியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையே நடந்த மோதல் போக்குக்கு பின்புலமாக இருந்தது டெக்னிஷியன் யூனியன். முதலில் உரசலாக இருந்து வந்த இந்த மோதல் பில்லா பாண்டி படப்பிடிப்பில் தகராறாக மாறியது. அந்தப் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினர் டெக்னிஷியன் யூனியன் தரப்பினர். இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை மேலும் சர்ச்சையில் முடிந்தது. இதனிடையே தயாரிப்பாளர் சங்கம் இனிமேல் டெக்னிஷன் யூனியனை பயன்படுத்த போவதில்லை என்று முடிவெடுத்தது. அடுத்தடுத்த கட்டமாக நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிய டெக்னிஷன் யூனியன் பெப்சியிலிருந்து நீக்கப்பட்டது.
பிரச்னையில் சூட்டோடு சூடாக அனுபவம் வாய்ந்த புதிய டெக்னிஷியன்களை தேடும் படலம் தொடங்கியது. அதற்கான முறையான அறிவிப்பு சங்கம் சார்பில் கொடுக்கப்படது. இதனால் இருவேறு துருவங்களானது இந்த இரு சங்கங்கள். இந்த நிலையில் மறுபடியும் எங்களை பெப்சியில் சேர்த்து கொள்ள வேண்டும் என முறையிட்டு டெக்னிஷன்கள் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டனர். இதில் அதன் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் தங்களை பெப்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, இப்பொழுது நடைமுறையில் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கி வந்த சம்பளத்தைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் 25-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.வைக்கப்பட்டுள்ளது.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை