Published : 19,Oct 2022 08:42 AM

சிறுவர்களுக்குள்ளான வாய்த்தகராறில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட 21 வயது இளைஞர்

Chengalpattu-Youth-killed-in-a-dispute-between-children-4-arrested

சிறுவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக செய்த சமாதான பேச்சுவார்த்தையில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் அடுத்த நல்லம்பாக்கம், சிவன் கோயில் அருகே இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தேவா (21), என்ற இளைஞர் கத்தியால் வெட்டியும், கட்டையால் தாக்கியும் கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

image

இது குறித்து தகவலறிந்த தாழம்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கொலை செய்து விட்டு தப்பியோடிய நபர்களை பிடிக்க தாழம்பூர் ஆய்வாளர் வேலு தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கீரப்பாக்கம் கிரஷர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நான்கு பேரை பொலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றனர். இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் கைது செய்யபட்டவர்கள் மேலக்கோட்டையூரைச் சேர்ந்த சுதர்சன் (எ) சுனில் (22), நெடுங்குன்றத்தைச் சேர்ந்த ரத்தினம் (22), இசக்கிவேல் (19), கண்டிகையைச் சேர்ந்த ராஜேந்திரன் (19), என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், கண்டிகையைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும், நல்லம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுவனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு இருந்துள்ளது.

image

இதையடுத்து இந்த பிரச்னையை தேவா மற்றும் சுனில் இருவரிடம் கூறியதன் பேரில் தேவாவும் சுனிலும் செல்போனில் பேசிய போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சமாதானம் செய்ய நேற்று மாலை வரவைத்து இருதரப்பும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வாய்த்தகராறு முற்றி மோதிக் கொண்டதில் தேவாவை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். அவர்ளிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்