Published : 18,Oct 2022 10:30 AM
ஈரோடு: உறவினரின் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்ற தம்பதியருக்கு நேர்ந்த பரிதாபம்

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியினர் மீது கிரேன் வாகனம் மோதிய விபத்தில் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் மூலப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சுப்ரமணி - பாப்பாத்தி தம்பதியர். இவர்கள் உறவினரின் இறப்பு நிகழ்விற்கு இருசக்கர வாகனத்தில் பூந்துறை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது செட்டிபாளையம் அருகே வந்தபோது பின்னால் வந்த கிரேன் வாகனம் இவர்கள் மீது மோதியது.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், உயிரிழந்த சுப்ரமணி ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் என்பது தெரியவந்தது. இச்சம்பவத்தால் ஈரோடு-பூந்துறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.