Published : 18,Oct 2022 09:50 AM

திருமண ஆசைகாட்டி பள்ளி மாணவியை கடத்திச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது

Youth-abducted-school-girl-as-a-marriage-prospect-arrested-in-Pokso

ஓமலூர் அருகே திருமணம் செய்வதாக பள்ளி மாணவியை கடத்தி சென்ற இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள சிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி. நெசவு தொழிலாளியான இவர், 17 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அழைத்து சென்றுள்ளார்.

image

இதையடுத்து மாணவியை ஒரு ஊருக்கு அழைத்துச் சென்று நான்கு நாட்களாக அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மகளை காணவில்லை என்று பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

இந்நிலையில், போலீசார் தேடுவதை அறிந்த ரகுபதி, நேற்று மாலை மாணவியை கொண்டு வந்து அவர்கள் வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளார். இதையறிந்த போலீசார் மாணவியின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் திருமணம் செய்வதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

image

இதையடுத்து ரகுபதி மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓமலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்