
ஐபிஎல் அடுத்த சீசனுக்கு அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது ஐபிஎல் தான். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ள ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் 2023 ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎல் அணிகள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடத்தப்படும் என்றும், இந்த மினி ஏலம் வரும் டிசம்பர் 3வது வாரத்தில் பெங்களூருவில் நடக்கவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மினி ஏலத்துக்கான அணிகளின் தொகை ரூ.90 கோடியில் இருந்து 95 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அணி உரிமையாளர்கள் முக்கியமான 15 வீரர்களை வைத்துக்கொண்டு மீதமுள்ளவர்களை ஏலத்தில் விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: குரூப் சுற்று, சூப்பர் 12, அரையிறுதி.. டி20 உலகக்கோப்பையின் சுழற்சி அட்டவணை முழு விபரம்