[X] Close

அரசுப் பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் திட்டம்

Yoga-Classes-in-Government-Schools--Chief-Minister-s-Program

தமிழக அரசுப்பள்ளிகளில் விரைவில் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.


Advertisement

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பேசிய பன்னீர்செல்வம், தங்களை போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேணடும் என்று ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார். 

பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அரசுப்பள்ளிகளில் யோகா வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், தனது தலைமையிலான அரசு தமிழகத்தில் கல்விப் புரட்சியை நிகழ்த்தி வருவதாகவும் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close