Published : 15,Oct 2022 03:04 PM

”குழாய திறந்தா தண்ணீர் வராது.. மதுபானம்தான் வரும்” - ம.பி போலீசை அதிரவைத்த கிராமத்தினர்

Liquor-coming-out-of-handpump-instead-of-water-at-madhya-pradesh

சுந்தர் சி இயக்கத்தில் உருவான கலகலப்பு படத்தில், தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கச் சென்றபோது பெண்களுக்கு பால் இலவசமாக கொடுக்கப்படும் என மனோ பாலா பிரசாரம் செய்ய, அவருக்கு எதிராக போட்டியிடும் சந்தானம் ஆண்கள் அனைவருக்கும் இலவசமாக மதுபானம் கொடுக்கப்படும் என பிரசாரம் செய்வார்.

அப்படியான சம்பவம் ஒன்று மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் உண்மையிலேயே அரங்கேறியிருக்கும் சம்பவம் அம்பலமாகியிருக்கிறது. அதன்படி, மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள பன்புரா என்ற கிராமத்தில்தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

image

பன்புரா கிராமத்தில் உள்ள அடி குழாய்களில் குடிதண்ணீருக்கு பதிலாக மதுபானம் வருவதாக அறிந்த போலீசார், அதனை உடனடியாக கண்டறிந்து பறிமுதல் செய்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக பன்புரா கிராமம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனையில், எட்டு ட்ரம் முழுவதும் விவசாய நிலத்துக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட மதுபானங்களை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக பேசியுள்ள குணா மாவட்ட காவல்துறை அதிகாரி பங்கஜ் ஸ்ரீவஸ்தவா, “அடி குழாய்களை முதலில் உபயோகித்து பார்த்தபோது அதன் கீழ் மறைத்து வைக்கப்பட ட்ரம் இருந்தது. குழாயை பம்ப் செய்தபோது அதிலிருந்து மதுபானம் வந்தது. அது இன்னொரு பக்கத்தில் உள்ள பைப்பிலும் இணைக்கப்பட்டிருந்தது” எனக் கூறியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Zee News (@zeenews)

தொடர்ந்து பேசிய பங்கஜ், “சட்டவிரோதமாக மதுபானம் விற்பதற்காக இப்படியாக மண்ணுக்குள் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ட்ரம்மை புதைத்து அதன்மீது குழாயை அமைத்து நிறுவச் செய்திருக்கிறார்கள். காவல்துறையினர் சோதனையிட வருவதை அறிந்த அந்த கும்பல் கிராமத்தை விட்டு தப்பியோடிவிட்டார்கள்.

ஆனால் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட எட்டு பேரை அடையாளம் கண்டிருக்கிறோம். அவர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக நடந்து வருகிறது. பன்புரா கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இந்த மதுபானம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கிராமத்தில் உள்ள எல்லா பகுதிகளிலும் கூடுதலாக ஆய்வு நடத்தி வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்